Friday, 9 September 2011

நண்பனில் இளைய தளபதியின் புதிய லுக்!


இளைய தளபதி விஜய் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் படம் நண்பன், தமிழ் சினிமா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பில் இளைய தளபதி உட்பட ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா என அனைவரும் பயங்கர லூட்டி அடித்துள்ளனர். தன்னுடைய கேரியரில் மிக முக்கியமான படம் நண்பன் எனக் கூறியிருக்கும் இளைய தளபதி விஜய், படத்தில் ரசிகர்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக கூறினார். நண்பன் திரைப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் கிட்ட தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. படப்பிடிப்புகள் முடிவுற்றதை கொண்டாட இளைய தளபதி விஜய் பார்ட்டி ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தார். பார்ட்டியில் இளைய தளபதி உட்பட ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா என அனைவரும் நடனம் ஆடி அசத்தினார்களாம். அதுமட்மின்றி, படத்தில் விஜய் புதியதொரு தோற்றத்தில் தோன்றுகிறாராம் என பட வட்டாரங்கள் தெரிவிகின்றன. நண்பன் வரவிருக்கும் 2012 பொங்கல் அன்று வெளிவர இருக்கிறது.

No comments:

Post a Comment