Friday, 5 August 2011

கோபத்தை கைவிட்டார் விஜய் : கையிலெடுக்கிறார் சீமான்!!

டைரக்டர் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட கோபம் படத்தை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டார் விஜய். ஆனால் சீமான் அதே கோபத்தை வேறு நடிகரை வைத்து இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் படத்திற்கு கோபம், பகலவன் என பலபல டைட்டில்கள் கூறப்பட்டன. எந்த டைட்டிலும் உறுதி செய்யப்படாத நிலையில் சீமான சிறைவாசத்துக்குள்ளானார். சிறைக்குள் இருந்தபடியே கோபம் படத்தின் கதையை எழுதி முடித்த சீமான், சிறையில் இருந்து வெளியே வந்ததும் தேர்தல் பிரசாரத்தில் பிஸியானார். இடையில் கிடைத்த நேரத்தில் எல்லாம் விஜய்க்கு கதை சொன்ன சீமான், கதை சொல்லிச் சொல்லியே ஓய்ந்து விட்டாராம்.

இரண்டு மூன்று க்ளைமாக்ஸ்களை சொல்லியும் அதில் விஜய்க்கு திருப்தி இல்லாத நிலையில், அடுத்தடுத்த பட வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டார் இளைய தளபதி. 2013 வரை சில படங்களுக்கு விஜய் தனது கால்ஷீட்டை வாரி வழங்கியிருக்கிறார். அதில் கோபத்துக்கு இடமில்லை என்பதால் கிட்டத்தட்ட கோபத்தை விஜய் கைவிட்டு விட்டதாகவே கூறுகிறார்கள்.

அதேநேரம் சீமான் அந்த கோபத்தை கைவிடாமல், கையிலெடுக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வேறு நாயகனை வைத்தோ அல்லது அவரே ஹீரோவாகவோ கோபத்தை வளர்க்கக் கூடும் என்று அந்த தகவல் கூறுகிறது.

No comments:

Post a Comment