Friday, 5 August 2011
வேலாயுதத்தை பார்த்து கப் சிப் ஆன விஜய்!
போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் வேலாயுதம் படத்தை போட்டுப் பார்த்த நடிகர் விஜய், தனது கருத்து எதுவும் சொல்லாமல் கப் சிப்பாகி விட்டாராம். டைரக்டர் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தை பார்த்துள்ளார் விஜய். படம் முடிந்ததும் அமைதியாகக் கிளம்பி சென்றுவிட்டாராம் விஜய். பக்கத்திலிருந்த டைரக்டர் ராஜாவிடம் கூட எதுவும் சொல்லவில்லையாம். விஜய் கருத்து எதுவும் சொல்லாததால், டைரக்டர் ராஜா ரொம்பவே டென்ஷன் ஆகி விட்டாராம். என்னடா இது... படம் பிடிக்கவில்லையா? என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், விஜய் தன்னிடம் பேசியதாக டைரக்டர் ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன், கூறியிருக்கிறார். அப்போது, படம் பார்த்துவிட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டதால் விஜய் எதுவும் பேசவில்லையாம். படம் மிகப் பெரிய வெற்றிபெறும் என விஜய் கூறியதோடு, உன்னை வெகுவாகப் புகழ்ந்தார்," என்று கூறியுள்ளார் எடிட்டர் மோகன்.
இதுபற்றி டைரக்டர் ராஜா கூறுகையில், விஜய் மிக எளிமையான இனிய மனிதர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. இந்த படத்தில் அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. ரசிகர்களுக்கு இந்தப் படம் திகட்டாத விருந்தாக அமையும், என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment